tamilnadu

img

ஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி

லக்னோ:
குடியுரிமை சான்றாதாரங் களை காட்டினால் மட்டுமே, தகவல் அறியும் உரிமை(ஆர்டிஐ) சட்டமனுதாரர்களுக்கு, வேண்டிய விவரங்களை அளிப்போம் என்று உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ பல்கலைக் கழகம் கூறியுள்ளது.அதன்படியே, அலோக் சாந்தியா என்ற ஆர்டிஐ விண்ணப்பதாரர் கேட்டிருந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துள்ளது.

இதுதொடர்பாக, பல்கலைக் கழக துணை வேந்தரிடம் புகார் தெரிவித்தும் கூட, தகவல் கிடைத்தபாடில்லை என்று கூறப்படுகிறது.“இது பெரிய அதிர்ச்சி யாகும்; ஆர்டிஐ சட்டத்தை பல்கலைக்கழகம் தன் சொந்த லாபங்களுக்காக திரித்துள்ளது; இவ்வாறு கேட்க இவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை”என்று ஆர்டிஐ விண்ணப்பதாரர் சாந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார்.“சுயநிதிக் கல்வித்திட்டங் களுக்கான ஆசிரியர்கள் நியமனம் மற்றும் சம்பளம் குறித்தவிவரங்கள் தேவை” என்றுதகவலுரிமைச் சட்டத்தின் கீழ்சாந்தியா கோரிக்கை விடுத் திருந்தார். இதற்குத்தான் லக்னோ பல்கலைக்கழக நிர்வாகமானது, “விண்ணப்ப தாரர் இந்தியர் என்பதற்கான சான்றுகளை காட்டினால் மட்டுமே தகவல்களை வழங்க முடியும்” என்று கூறியுள்ளது.ஆர்டிஐ விண்ணப்ப தாரர்களிடம் குடியுரிமை ஆதாரம்கேட்பது, கடந்த சில ஆண்டு களாகவே நடைமுறையில் இரு ந்து வருவதாக, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.“சில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் அந்த விதியற்ற விதியே நடைமுறையாகிவிட முடியாது” என்று சாந்தியா கொந்தளித்துள்ளார்.

;